News November 14, 2025
வேலூர்: சடலத்தை ஆற்றில் தூக்கி செல்லும் அவலம்!

குடியாத்தம் மூங்கப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்களுக்கு கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் சுடுகாடு உள்ளது. மழையால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆற்று தண்ணீரில் மூழ்கியது. அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் இறந்த நிலையில், நேற்று (நவ.13) மாலை அவருடைய உடலை அடக்கம் செய்ய ஆற்றோரத்தில் சேறும் சகதியும் நிறைந்த பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
Similar News
News December 17, 2025
குடியாத்தம் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாளை டிச.18 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சுபலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
ஜனாதிபதி முர்முவை வரவேற்ற வேலூர் கலெக்டர்!

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (டிச.17) திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 11:30 மணிக்கு வருகை தந்தார். அவரை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
News December 17, 2025
ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு இன்று (டிச.17) வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பொற்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் போது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


