News November 26, 2025
வேலூர்: குழந்தை திருமணம் – குடும்பம் மீது பாய்ந்த போக்ஸோ!

வேலூர்: புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (25), 17 வயது சிறுமிக்கும் ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இதை அறிந்த கிராம நல அலுவலர் சித்ரா நேற்று மணிகண்டன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றார். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
வேலூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.23) வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வேலூர் நேதாஜி மார்க்கெட் தேச பக்தர்கள் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
News January 23, 2026
வேலூர்: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

வேலூர் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <
News January 23, 2026
வேலூர்: தவறான ஊசியால் பறிபோன உயிர்!

ஒடுகத்துாா் பேரூராட்சி ஓ.ராஜாபாளையத்தை சோ்ந்த பழ வியாபாரி சீனிவாசன் (27). இவர் கடந்த 16-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக ஒடுகத்தூரில் உள்ள தனியாா் கிளினிக்குக்கு சென்றார். மருத்துவா் இல்லாததால் மருத்துவரின் சகோதரா் இவருக்கு 2 ஊசி போட்டுள்ளார். பின் மயங்கிய இவர், சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜனவரி 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.


