News November 25, 2025

வேலூர்: கழிவுநீர் கால்வாயில் மிதந்த பெண் சிசு சடலம்!

image

வேலூர் கொசப்பேட்டையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று (நவ.24) பெண் சிசு சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். தற்போது, இந்த சிசுவை கால்வாயில் வீசியது யார் என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

வேலூர்: பொங்கல் பரிசு வரலையா..?

image

வேலூர் மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

வேலூர்: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

image

வேலூர் மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலூரில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9840023011 எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!

News January 13, 2026

வேலூரில் மணல் கொள்ளை; தட்டி தூக்கிய போலீஸ்

image

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி. குப்பம் பாலாற்றில் மணல் கடத்துவதாக மேல்பட்டி போலீசாருக்கு நேற்று (ஜன.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 மணல் மூட்டைகளை பைக்கில் கடத்திக்கொண்டு சாமரிஷி குப்பம் பகுதியை சேர்ந்த அரேஸ் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!