News November 19, 2025

வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

image

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News January 21, 2026

வேலூர்: 500 ரூபாய் தரேன்…பெண்ணிடம் அட்டூழியம்!

image

குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று (ஜன.20) குடிபோதையில் இருந்த நபர் அப்பகுதியில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தனது சட்டைப் பையில் இருந்த 500 ரூபாயை எடுத்து கொடுத்து, தன்னுடன் வருமாறு அழைத்து கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அருகில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணனை நததி வருகின்றனர்.

News January 21, 2026

வேலூர்: மனைவியின் புடவையில் தொங்கிய கணவன்!

image

பேரணாம்பட்டு பாகூர் உசேன் வீதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (27), ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது போதையில் வீதிக்கிற்கு வந்த இவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தமிழ்அழகன் வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 21, 2026

வேலூரில் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

image

முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேர்வை எழுத 3,952 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 15 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. காலையில் நடக்கும் முதல்தாளில் கணிதம் தொடர்பான வினாக்களும், பிற்பகல் 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான வினாக்களும் இடம் பெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

error: Content is protected !!