News November 19, 2025
வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News January 20, 2026
வேலூர்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 20, 2026
வேலூரில் 32,18,430 ரூபாய் வரி!

வேலூர் போக்குவரத்து சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 804 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் விதிமீறிய 109 பஸ்களுக்கு ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் அபராதமும், பிற மாநில நுழைவுவரி செலுத்தாத பஸ்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 430 வரி வசூல் செய்யப்பட்டது.
News January 20, 2026
வேலூர் சிறைக்கு திரும்பிய 29 கைதிகள்!

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 29 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. அதன்பேரில் கைதிகள் பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் பரோல் முடிந்து அனைத்து கைதிகளும் நேற்று (ஜன.19) மீண்டும் சிறைக்கு திரும்பினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


