News November 26, 2025

வேலூர்: இளைஞர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்!

image

வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.17.5 லட்சம் மோசடி செய்த காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் சுமதி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதால், அந்த பெண்ணை கைது செய்து, மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 17, 2026

வேலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

image

வேலூர்: காவனூர் ரெயில்வே நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அகோர் மாண்டி (60) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அங்கு தேங்கிக் கிடந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 17, 2026

வேலூர்: கிணற்றில் சடலமாக மிதந்த முதியவர்!

image

வேலூர்: நீலகண்டபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் (50), கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அருகில் இருந்த கிணற்றில் கங்காதரன் பிணமாக மிதந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

குடியாத்தம்: தாயை பார்க்கச் சென்ற மகளுக்கு ஏற்பட்ட சோகம்!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கு (27) 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரேவதி தனது தங்கை ராதிகாவுடன் ஆம்பூர் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு பைக்கில் சென்று வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில், படுகாயமடைந்த ரேவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!