News October 18, 2025

வேலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

வேலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த <<>>இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 9, 2025

வேலூரில் மலிவு விலையில் வாகனம்!

image

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 22ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

வேலூர்: தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் நகை கொள்ளை!

image

வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மருதன், ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 21 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று(டிச.8) காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.8) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!