News May 15, 2024
வேலூர் அருகே மணல் கடத்தல்: போலீஸ் விசாரணை

பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் காணாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று (மே 14) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குபியரசன், அப்துல் அத்திக்பாஷா ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
வேலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
வேலூரில் பைக் திருட்டு: இளைஞர்களுக்கு 3 ஆண்டு சிறை!

வேலூர் மாவட்டத்தில் பைக் திருடியதாக 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மீது நடைபெற்ற வழக்கில், வேலூர் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தது. இதன்பேரில் இருவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சமீப காலமாக பிரதேசத்தில் அதிகரித்து வரும் வாகன திருட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News December 12, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


