News October 19, 2025
வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

வேலூர் மாவட்டம் ஆரியூரை சேர்ந்தவர் சித்ரா (53). இவர், சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அக்.18 அரியூர் பகுதியில் வியாபாரத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் சித்ராவின் கழுத்தில் இருந்து ஒரு சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சித்ரா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
வேலூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
வேலூர்: பைக் மோதி துடிதுடித்து பலி!

வேலூர்: சேண்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஆண்டாள்(67). இவர், நேற்று(டிச.7) அப்பகுதியில் உள்ள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது பைக் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். பைக்கில் மோதிய முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர், அவரது தாயார் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 8, 2025
வேலூர்: தூக்கிட்டு தற்கொலை!

கே.வி.குப்பம் பகுதியை அடுத்த வேப்பங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் குமரன்(52) சுமார் 12 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தனது வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


