News November 25, 2025

வேலூர் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி!

image

வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக மாவட்ட அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தண்டபாணி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் தலைகள், சிறப்பு உரைகள் வெளியீடு, வினாடி வினா, கடிதம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

குடியாத்தம் செருவங்கி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(45). தூய்மை பணியாளரான இவர், நேற்று(ஜன.20) குடியாத்தம் அடுத்த வள்ளிநகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: மாணவர்களுக்கு பாஸ் வழங்கிய ஆட்சியர்

image

கன்னியாகுமரியில் ஜன.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழித்தடப் பாஸ்களை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஜன.20) வழங்கினார். மாணவர்களின் கல்வி, இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!