News August 19, 2024
வேலூரில் 1202 பேருக்கு நாளை உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-ம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,202 பேருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டிஐஜி தேவராணி, எஸ்பி. மதிவாணன் ஆகியோர் தலைமையில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற உள்ளது.
Similar News
News January 20, 2026
வேலூர்: பூட்டிய வீட்டில் நாற்றம்; திறந்தவுடன் அதிர்ச்சி!

திருப்பத்தூரை சேர்ந்த மணிவண்ணன் (50) பேரணாம்பட்டில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவர் ஆயக்கார வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுயதால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மணிவண்ணன் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 20, 2026
வேலூரில் விபத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்!

மேல்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தில் நேற்று (ஜன.19) தனியார் பள்ளி பேருந்து அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 20, 2026
வேலூரில் கோரமாக கிடந்த சடலம்!

திருவலம் அடுத்த சேர்க்காடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக திருவலம் போலீசாருக்கு நேற்று (ஜன.19) தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவலம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


