News June 17, 2024
வேலூரில் மின்தடை ரத்து: அதிகாரிகள் தகவல்

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை ஜூன் 18ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடப்படாமல் மின்நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
வேலூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

வேலூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.25) காய்கறி விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.20, உருளை ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.26, மிளகாய் ரூ.55, வெண்டை ரூ.40, கத்திரிக்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.30, தேங்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.15, பீன்ஸ் ரூ.40, அவரை ரூ.30, கேரட் ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.
News January 25, 2026
வேலூர் மக்களே! OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
வேலூர்: தொழிற்சாலையில் துடிதுடித்து பலி!

பேரணாம்பட்டு அஷன் பாஷா என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் நேற்று பணியில் இருந்த ஷேக் அலி (60) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகியோருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


