News August 8, 2024
வேலூரில் மழைக்கு வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமெண்டில் குறிப்பிடவும்.
Similar News
News November 9, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
தேர்வு மையம் முன்னேற்பாடு பணிகளை எஸ்பி ஆய்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வேலூர் மாவட்டத்தில் நாளை (நவ. 9) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 9561 பேர் எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையமான தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று ( நவ. 8) மாலை ஆய்வு செய்தார்.
News November 8, 2025
வேலூர் எஸ்பி தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நாளை நவம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், எஸ்பி மயில்வாகனன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


