News August 22, 2025

வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

image

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

வேலூர்: மனைவியின் புடவையில் தொங்கிய கணவன்!

image

பேரணாம்பட்டு பாகூர் உசேன் வீதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (27), ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது போதையில் வீதிக்கிற்கு வந்த இவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தமிழ்அழகன் வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 21, 2026

வேலூரில் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

image

முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேர்வை எழுத 3,952 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 15 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. காலையில் நடக்கும் முதல்தாளில் கணிதம் தொடர்பான வினாக்களும், பிற்பகல் 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான வினாக்களும் இடம் பெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

News January 21, 2026

வேலூரில் நாளை ஆதியோகி ரத யாத்திரை

image

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் வேலூர் மாவட்டத்தில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. இந்த ரத யாத்திரை வேலூர், கருகம்பத்தூர், கொணவட்டம், பொய்கை, அரியூர், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி, மண்டித்தெரு, சத்துவாச்சாரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற உள்ளது.

error: Content is protected !!