News August 4, 2024
வேலூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில், 2732 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் மாநிலம் முழுவதும் வெற்றிபெறும் 1000 பேருக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வீதம் அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை உதவி தொகையாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
வேலூரில் அதிரடியாக 164 பேர் கைது!

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளிமாநிலங்களை சேர்ந்த 18 பேர் உள்பட 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 44,104 போதை மாத்திரைகள், 23 கிராம் என மெத்த பெட்டமைன், 2 பைக், ஒரு கார், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 49 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 18, 2026
வேலூர்: சாலை விபத்தில் 2 துடிதுடித்து பலி!

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி (29). இவர் தனது தங்கையுடன் பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே நடந்து வந்த செல்வம் (50). மீது மோதியதில், சம்பவயிடத்திலேயே செல்வம் இறந்தார். படுகாயம் அடைந்த அஷ்ரப்அலி, தங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் அஷ்ரப்அலி உயிரிழந்தார். சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறது.
News January 18, 2026
வேலூர் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


