News August 22, 2024
வேலூரில் உடற்தகுதி தேர்வில் 232 பேர் தேர்ச்சி

வேலூரில் நேற்று இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 346 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இதில் 232 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நாளை உடற்திறன் நடைபெறும். மேலும், இன்று 204 பேருக்கு உடற்திறன் தேர்வு நடைபெறுகிறது.
Similar News
News November 11, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் குழந்தை பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில், நேற்று (நவ.10) தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்பவரின் ஒன்றரை வயது மகள் துர்காஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( நவம்பர்-10) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 10, 2025
வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


