News August 23, 2025

வேலூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

image

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <>RTO<<>> அலுவகத்தில் புகார் செய்யலாம். அவசியமான தகவல் ஷேர் பண்ணுங்க

Similar News

News January 24, 2026

BREAKING: வேலூரில் உஷாரான திமுக!

image

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க வலியுறுத்தி ஜன.27-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் போராட்டம் அறிவித்த நிலையில், ஜன.26-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என வேலூர் தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி நந்தகுமார் அதிரடியாக அறிவித்தார்.

News January 24, 2026

வேலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

BREAKING: வேலூரில் இருவர் துடிதுடித்து பலி!

image

பேர்ணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து பணியில் இருந்த ஷேக் அலி (58), ஜமால் பாஷா (41) இருவரும் மயங்கி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!