News March 27, 2024

வேப்பந்தட்டை அருகே ரூ.79,000 பறிமுதல்

image

வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள வெங்கனூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரூ. 79,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் காரில் எடுத்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரிடமிருந்து அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 13, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மற்றும் பாரத் நெட் ஒர்க் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதிகளில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டார்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நாளைக்குள்ளாக (ஜன.14) anfinet.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 13, 2026

பெரம்பலூர் மாவட்ட MLA எண்கள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1.பெரம்பலூர் (தனி) – எம். பிரபாகரன் – 9786660160 – mlaperambalur@tn.gov.in
2.குன்னம் – எஸ்.எஸ்.சிவசங்கர் – 9443142600 – mlakunnam@tn.gov.in
இதனை உங்களது உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News January 13, 2026

மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!