News September 3, 2025
வேட்டைக்காரனிருப்பு -உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கீழையூர் ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு புயல் பாதுகாப்பு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கீழையூர் வட்டார ஆத்மா திட்ட கமிட்டி தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார்.
இதில் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Similar News
News December 9, 2025
நாகை: குட்கா கடத்தல் கும்பல் கைது

நாகை வெளிப்பாளையம் சிவன் கீழவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காா்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றுள்ளது. அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார், காரில் சோதனை செய்த போது, 11 மூட்டைகளில் 128 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.
News December 9, 2025
நாகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இன்று (டிச.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாகை மாவட்டம், அண்ணாபேட்டை, வண்டுவாஞ்சேரி, துளசியாபட்டினம், கரையங்காடு, விளாங்காடு, கற்பகநாதர்குளம், கீழபெருமழை, மேலபெருமழை, தில்லைவிளாகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
நாகை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


