News November 19, 2024

வேடசந்தூர் குடகனாறு அணை திறப்பு

image

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரி குடகனாறு அணையின் நீர்வரத்து முழு கொள்ளளவு அடைந்த நிலையில் இன்று விவசாயிகள் பயன்பாட்டிற்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தண்ணீரை திறந்து வைத்து மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றார். இந்நிகழ்வில் ஒன்றிய & பேரூர் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் (ம) பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் காவல்துறையின் மழைக்கால பாதுகாப்பு அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையதளம் மூலம் இன்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், ஏரி, குளம், கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

image

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!