News December 17, 2025

வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்

image

வெனிசுலா-அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலா எல்லைக்குள் நுழையும், வெளியேறும் அனைத்து தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களையும் உடனடியாக முடக்க அவர் உத்தரவிட்டுள்ளார். தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெனிசுலாவை முற்றுகையிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

2026 தேர்தலில் வெல்லப்போவது யார்?

image

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 2024-ல் பதிவான வாக்குகளை கொண்டு வெற்றி கணக்குகள் ஆராயப்பட்டு வருகின்றன. அந்த வகையில், DMK-26.93%, INC-10.67%, CPM-2.52%, CPI-2.15%, VCK-2.25%, MDMK-2.28%, IUML-1.17% என 46.97% பெற்றது. ADMK-20.46%, DMDK-2.59%, NDA-வில் BJP-11.24%, PMK-4.33%, AMMK-0.90%, TMC-0.94 என மொத்தம் 18.28% & NTK-8.22% பெற்றது. இத்தேர்தலில் TVK-வும் உள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது.

News January 25, 2026

அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பாகும் ‘அயலி’

image

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால், செவ்வாய்க்கிழமை பள்ளிகளில் படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

News January 25, 2026

டி20 WC-ல் பாகிஸ்தான் விளையாடுவது உறுதி

image

டி20 WC-ல் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம் <<18949883>>என்று பரவிய தகவலுக்கு <<>>முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி20 WC-க்கான அணியை பாகிஸ்தான் அறிவித்ததே அதற்கு காரணம். பாகிஸ்தான் அணி: சல்மான் அலி அகா(C) அப்ரார் அகமது, பாபர் ஆஸம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா (WK) , முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நசீம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

error: Content is protected !!