News May 13, 2024

வீடற்றோருக்கு கூடுதலாக 3தங்கும் விடுதிகள்

image

திருச்சி மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.1கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமென மாநகராட்சி அலுவலர்கள் இன்று தெரிவித்தனர். 

Similar News

News December 15, 2025

திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

image

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி: முத்தரையர் தபால் தலை வெளியீடு

image

முத்தரையர்கள் தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், கிபி 600-900 வரை ஆட்சி செய்தனர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் காவிரி ஆற்றினை வளமான சமவெளியாக்கி மாற்றினர். முதலாம் முத்திரை குலமதிதன் ஆவார். இரண்டாம் முத்திரையர் சுவரன் மாறன் ஆவார். இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர்க்கு மத்திய அரசால் நேற்று தபால்தலை வெளியிடப்பட்டது.

error: Content is protected !!