News August 5, 2024
வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ரூ.1 கோடி நிதி உதவி

கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதில் இருந்து மக்கள் விரைவில் மீண்டுவர வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமைச்செயலகத்தில் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை (DD) வழங்கியுள்ளார்.
Similar News
News January 22, 2026
வேலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

காட்பாடி அருகே கொடுக்கன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (64). குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்தவர் நேற்று ஜன.21 வீட்டின் அருகில் உள்ள முருங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சமத்துவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
வேலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
வேலூர்: இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

வேலூர் பெரியார் பூங்கா அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று (ஜன.21) 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர்.


