News August 24, 2025

விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மின் துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் குறைகளை மனுவாக நேரடியாக தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 16, 2026

திருவள்ளூரில் டாஸ்மாக், கறிக் கடைகள் இயங்காது!

image

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கள்ளத் தனமாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 16, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 15, 2026

திருவள்ளூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா..

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!