News June 19, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜீன்.21) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
தேனி: போலீஸ் எனக் கூறி வழிப்பறி – ஒருவர் கைது

போடி பகுதியை சேர்ந்தவர் மதன்பிரபு. இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் தேவாரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த ஒருவர் தான் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி பைக்கிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என ரூ.2,000 பெற்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போடி தாலுகா போலீசார் போலீஸ் என கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News January 24, 2026
தேனி: டிராக்டர் மோதி இளைஞர் பரிதாப பலி

தேனி, அன்னஞ்சி விளக்கு முதல் வீரபாண்டி வரை செல்லும் புறவழிச் சாலையில் வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் நேற்று பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற டிராக்டர், தேவதானப்பட்டிக்கு பைக்கில் சென்ற சந்துரு (20) மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி GH-க்கு அனுப்பி வைத்தனர்.


