News November 25, 2025
விவசாயிகளின் கவலையை புரியாத திமுக: R.B. உதயகுமார்

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், EPS நீலிக்கண்ணீர் வடிப்பதாக CM ஸ்டாலினின் விமர்சனத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகளின் கண்ணீர், கவலையை புரிந்துகொள்ளாத அரசாக திமுக இருக்கிறது என்று சாடிய அவர், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிகொடுத்துவிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என்றும் தனது குறைகளை மறைக்கவே EPS-ஐ <<18374909>>ஸ்டாலின் <<>>விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
Similar News
News January 24, 2026
சகல செல்வங்களை அருளும் சனிக்கிழமை விரதம்!

பெருமாளுக்காக சனிக்கிழமையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சனி பகவான் துன்பங்களை தருவதில்லை என்பது நம்பிக்கை. செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். காலை குளித்துவிட்டு பூஜை செய்து மாலை வரை உணவு உண்ணாமல் பால், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
News January 24, 2026
கூட்டணியால் கூடுதல் பலம் கிடைக்கும்.. தமிழிசை

NDA கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் PM மோடி, EPS, TTV, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய தமிழிசை, காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. எனவே, PM சொன்னதுபோல் 2026-ல் திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினார். மேலும், NDA கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது, இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்றார்.
News January 24, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT


