News August 22, 2025
விழுப்புரம்: வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.21) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
Similar News
News January 24, 2026
திண்டிவனத்தில் கிடந்த ஆண் சடலம்!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்பாதி மேம்பாலம் அருகே 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 24, 2026
விழுப்புரத்தில் உடல் கருகி பலி!

செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாம்பாள்(73). இவர், கடந்த ஜன.18ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி எரிந்தது. இதில், கடுமையான தீக் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனினி உயிரிழந்தார்.
News January 24, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.


