News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 17, 2026
விழுப்புரம்: வாலிபரை கத்தியால் குத்திய சிறுவன்!

விழுப்புரம்: பானாம்பட்டைச் சேர்ந்த ராஜா (36), நேற்று முன்தினம் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன், ராஜாவிடம் பைக்கை கடனாக கேட்டுள்ளான். அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் உடன் வந்த 2 பேர் ராஜாவை கத்தியால் குத்தி தாக்கினர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
விழுப்புரம்: காதலி எடுத்த முடிவால் காதலன் கைது!

விழுப்புரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் (33) என்பவருக்கும், ஹோம் கேர் நர்ஸாக வேலை செய்து வந்த பூமணி என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பூமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாலச்சந்தர் அடித்ததால் பூமணி நேற்று விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாலச்சந்தரை போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!


