News November 26, 2025
விழுப்புரம்: பெண் மர்ம சாவு – திடீர் திருப்பம்!

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27) தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் பார்வதி இறந்து கிடந்தார். இந்நிலையில், அவருக்கும், கணவர் மதியழகனுக்கும் ஏற்பட்ட தகராறில், மதியழகன் பார்வதியை சுவற்றில் முட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் மதியழகனை கைது செய்தனர்.
Similar News
News January 20, 2026
விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

விழுப்புரம்: திண்டிவனம் வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் ஜனவரி 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News January 20, 2026
விழுப்புரம்: வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்!

விழுப்புரம்: வளவனூர் அருகே ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராம்பாக்கம் வழியாக விழுப்புரம் நோக்கி செல்லும் போது கொங்கும்பட்டு என்ற இடத்தில் பிரபு, கோதண்டம், தமிழ்ச்செல்வன், சாந்தமூர்த்தி ஆகியோர் விஷ்ணுவின் பைக்கை திடீரென மறித்து, தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிவு
News January 20, 2026
விழுப்புரம்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

விழுப்புரம் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!


