News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

BREAKING: விழுப்புரத்தில் கூண்டோடு கைது!

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று (ஜன.20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம், ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறினார்கள்.

News January 20, 2026

விழுப்புரம்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

image

விழுப்புரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

image

விழுப்புரம்: திண்டிவனம் வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் ஜனவரி 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!