News November 25, 2025
விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
விழுப்புரம்: இரு தரப்பினர் கடும் மோதல்.. போலீஸ் குவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், சின்ன நெற்குன்றம் கிராமத்தில் நேற்று ஜன.17 ஒரு தரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூவீலரில் அதிக ஒலி எழுப்பியபடி சென்றுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையறிந்த அப்பகுதி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
News January 18, 2026
விழுப்புரம்: பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்து பலி!

விழுப்புரம், திண்டிவனம் அருகே தானங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் துரை (48). இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் ஆத்தூர் டோல்கேட்டில் இருந்து தானங்குப்பத்துக்குச் சென்று கொண்டிருந்தார். கரிக்கம்பட்டு வளைவில் ஆட்டோவை வளைத்தபோது, சாலையோர பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்தார். இந்தச் சம்பவத்தில் துரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 18, 2026
விழுப்புரம்: சாலை விபத்தில் ஒருவர் கொடூர பலி

திருவெண்ணெய்நல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (62). இவர் நேற்று முன்தினம் கொசுவர்த்தி வாங்க பைக்கில் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (20). திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மீது மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்ர் அழகிரி விசாரித்து வருகிறார்.


