News November 14, 2025
விழுப்புரம்: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

விக்கிரவாண்டி அடுத்த எம். குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி மனைவி சித்ரா (54) கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், 5ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
News December 7, 2025
விழுப்புரம்: மருமகனுக்காக தன்னுயிரை மாய்த்த மாமா!

விழுப்புரம்: மேலக்கொந்தையை சேர்ந்த குமார் (53), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மருமகனை சென்று பார்த்து வந்துள்ளார். அதையொட்டி மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், அருகிலிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.07) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


