News April 2, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 15, 2026
விழுப்புரம்: சுற்றுலா வந்த வாலிபர்களுக்கு ஏற்பட்ட சோகம்!

விழுப்புரம்: குன்றத்தூரிலிருந்து கேரளாவுக்குச் சுற்றுலாச் வந்த இளைஞர்களின் வேன், விழுப்புரம் அருகே இருவேல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரவீன்குமார், கிஷோர், ஜெயப்ரகாஷ் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 15, 2026
விழுப்புரத்தில் துணிகரம் – பூட்டிய வீட்டில் கொள்ளை!

விழுப்புரம்: பெரியார் நகரைச் சேர்ந்த நிர்மல் குமார், மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா பெரியார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், இந்திரா தனது வீட்டை பூட்டிவிட்டு, நேற்று வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
விழுப்புரம்: காதலியிடம் மோசடி – காதலன் அதிரடி கைது!

திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (27), கடலூரைச் சேர்ந்த வாலிபர் துரைராஜும் சென்னையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி துரைராஜ் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த துரைராஜ் திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கில் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.


