News February 23, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 11, 2026
செஞ்சி வருகிறார் அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆதரித்து வாக்கு சேகரிக்க பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.11) வருகை தர உள்ளார். மாலை 4 மணி அளவில் மேல்மலையனூரிலும் இரவு 7 மணி அளவில் செஞ்சி, விழுப்புரம் சாலையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
News April 11, 2026
விழுப்புரத்தில் பயங்கர தகராறு

கண்டாச்சிபுரம் தாலுகா குடமுரட்டியைச் சேர்ந்தவர் மதியழகன் மனைவி கலையரசி(35). மதியழகனும், அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனும்(35) சகோதரர்கள். இந்நிலையில், இவர்களுக்கு பொதுவாக இருந்த 2 செண்ட் நிலத் தகராறில் ஆத்திரமடைந்த அன்பழகன், உறவினர் மணி(30) ஆகியோர் சேர்ந்து மதியழகனையும் கலையரசியையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.
News April 11, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


