News March 29, 2024
விழுப்புரம்: அதிமுகவினர் மீது வழக்கு பதிவு

அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், மண்டபம் முன்பு 8 கொடி கம்பங்கள், 2 பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, விழுப்புரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் அளித்த புகாரில், விழுப்புரம் அ.தி.மு.க., நகர செயலர் ராமதாஸ் உள்ளிட்ட 200 அ.தி.மு.க., வினர் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.
Similar News
News January 21, 2026
விழுப்புரத்தில் மாணவி பரிதாப பலி!

மரக்காணம், நம்பிக்கைநல்லூர் சுனாமி குடியிருப்பு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். மீனவரான இவரது மகள் நட்சத்திரா 9-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில், மகளுடன் பைக்கில் புதுச்சேரி – சென்ன சாலையில் சென்றபோது, நட்சத்திரா அணிந்திருந்த துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி இழுக்கப்பட்டு கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி உயிரிழந்தார்.
News January 21, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). தொழிலாளியான இவர், மடப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 21, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.20) இரவு – நாளை காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


