News November 14, 2025

விழுப்புரத்தில் வீடு புகுந்து கொள்ளை ; போலீஸ் வலை!

image

விழுப்புரம்: ஆடல் நகர் பகுதியில் பாண்டியன் எனபவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நுழைந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அவர் திரும்பியபோது இது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 10, 2025

விழுப்புரம்: மயங்கி விழுந்து விவசாயி பலி

image

கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கன்னியம்மாள் (45), செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தார். அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 10, 2025

விழுப்புரம்: பஸ்சில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

image

குன்னியூரைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (26), சென்னை திருமண நிகழ்வுக்காக அரசுப் பேருந்தில் விழுப்புரம் நோக்கி பயணித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அவர் இறங்கி பார்த்தபோது, தன் பையில் வைத்திருந்த 3.5பவுன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்துக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நகையை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபிரியா புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

விழுப்புரம்: அரசு ஊழியருக்கு நேர்ந்த வரதட்சணை கொடுமை!

image

ஹரியானா மாநிலம், பானிபட்டைச் சேர்ந்த சஞ்சனாவாத் (31), விழுப்புரம் மாவட்ட இளையோர் அலுவலராகப் பணிபுரிகிறார். இவருக்கு ரூ.60 லட்சம் செலவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் வினாயக் திக்ஷித் மற்றும் மாமனார் தர்மவீர் திக்ஷித் ஆகியோர் மேலும் வரதட்சணை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து சஞ்சனாவாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு.

error: Content is protected !!