News November 14, 2025
விழுப்புரத்தில் விஷம் அருந்தி தற்கொலை!

விழுப்புரம்: செஞ்சி தாலுகா சென்னாலூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(70). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 14, 2025
விழுப்புரம்: அரசு நிலத்திற்கு இரு தரப்பினர் மோதல்!

கீழ்நெமிலியை சேர்ந்த பாஸ்கர், மூர்த்தி என்பவரிடம் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது, அருகே இருந்த அரசு நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் தங்களுக்கு வழிப்பாதை விட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் மூர்த்தி. ஆனால், பாஸ்கர் அந்த நிலத்தில் பயிரிட்டதுடன், வழி விட மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. மாணவன் மீது போக்சோ!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜோஸ்வா (19), விழுப்புரம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News December 14, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


