News June 17, 2024

விழுப்புரத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

image

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் திரளாக தொழுகையில் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

Similar News

News January 17, 2026

விழுப்புரம்: முதியவர் பரிதாப பலி!

image

விழுப்புரம்: பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர் தனது பைக்கில், பைத்தாம்பாடி கூட்டுரோடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

விழுப்புரம்: வாலிபரை கத்தியால் குத்திய சிறுவன்!

image

விழுப்புரம்: பானாம்பட்டைச் சேர்ந்த ராஜா (36), நேற்று முன்தினம் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன், ராஜாவிடம் பைக்கை கடனாக கேட்டுள்ளான். அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் உடன் வந்த 2 பேர் ராஜாவை கத்தியால் குத்தி தாக்கினர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

விழுப்புரம்: காதலி எடுத்த முடிவால் காதலன் கைது!

image

விழுப்புரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் (33) என்பவருக்கும், ஹோம் கேர் நர்ஸாக வேலை செய்து வந்த பூமணி என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பூமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாலச்சந்தர் அடித்ததால் பூமணி நேற்று விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாலச்சந்தரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!