News August 6, 2024
விழுப்புரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 7) பல இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜானகிபுரம், கண்டப்பாக்கம், கண்டமானடி, கன்னிமடை, மரகதபுரம், பிடாகம், நத்தமேடு, அரியலூர் திருக்கை, கக்கனூர், போரூர், அனுமந்தபுரம், மங்கலாபுரம், அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமந்தூர், அரும்பட்டு, பழையபட்டினம், ஆணைவாரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News January 20, 2026
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் நேற்று(ஜன.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 20, 2026
விழுப்புரம்: +2 மாணவன் அடித்துக் கொலை!

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்காவை சேர்ந்தவர் விக்னேஷ். பிளஸ் 2 படித்து வந்த இவர், நேற்று(ஜன.19) அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பசுமாட்டை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். இதில், சுப்ரமணி, பூபதி, அவரது குடும்பத்தினர், விக்னேஷ், அவரது தந்தை வீரப்பன், தாய் மலர் ஆகியோரை தாக்கினர். இதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 20, 2026
விழுப்புரம்: கத்தியால் குத்தி கருணைக் கொலை!

விழுப்புரம்: கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகள்கள். இதில், இரண்டாவது மகள் சுமலதாவிற்கு 9 ஆண்டுக்கு முன்பு கோலியனூரில் திருமணம் நடந்தது. இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதனை பார்க்க முடியாத தந்தை, தன் மகளை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.


