News July 16, 2024

விழுப்புரத்தில் காலை முதல் மழை

image

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக விட்டு விட்டு லேசாக தூறல் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Similar News

News July 11, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியன்று குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், எண் மாற்றம் போன்ற பணிகளை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

விழுப்புரம் மலையனூர் கோயிலின் தல வரலாறு தெரியுமா உங்களுக்கு?

image

சிவன், பிரம்மனின் ஒரு தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டார். தோஷத்தால் சிவனின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்க துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் சிவன் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். தேவி உணவுகளை மயானத்தில் சூறையிட கபாலம் சிவன் கையிலிருந்து வந்து தேவி கையில் அமர்ந்தது. தேவி அதனை தன் காலால் நசுக்கி மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!