News August 8, 2024
விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் குடை எடுக்க மறக்காதீங்க.
Similar News
News November 12, 2025
வாக்காளர் தீவிர திருத்தப் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சுதாகர் நகர் ராஜா தேசிங்கு தெருவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.12) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் நகர் நல அலுவலர் பிரியா உட்பட பலர் பங்கேறறனர்.
News November 12, 2025
விழுப்புரம்:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 12, 2025
விழுப்புரம்: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு!

நாடு முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 14 அன்று மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


