News August 4, 2024
விளையாட்டு வீரர்களை பாராட்டிய அமைச்சர்

இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற செவி மாற்றுத்திறனாளிகளுக்கான T20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரையும் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
Similar News
News January 18, 2026
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 18, 2026
சென்னையில் தவெக தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநில வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
News January 18, 2026
சென்னை: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


