News May 8, 2024
விளையாடி கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை, கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர் தனது வீட்டின் முன்பு இருந்த இரும்பு குழாயில் நேற்று மாலை கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீராமின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
தேர்தல் பணி தொடர்பாக முதற்கட்ட பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News March 6, 2026
ராணிப்பேட்டை: +2 தேர்வு நேரத்தில் நாட்டு வெடி வீச்சு

தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். இந்நிலையில் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட தகராறில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த மாணவர் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .
News March 6, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (மார்ச் 05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


