News April 1, 2025
வில்லுக்குறி ஆற்றங்கரையில் கிடந்த சடலம்

வில்லுக்குறி ஆற்றின் கரையில் உடல் அழுகிய நிலையில்கண்டறியப்பட்டது. இரணியல் போலீசார் உடனடியாக அந்த உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணை செய்ததில் அவர் மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்த ஆல்வின் என தெரிய வந்தது.மீனவரான இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில்,இவரின் இறப்பு குறித்து இரணியல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
சாமிதோப்பில் கொலை செய்யப்பட்டவர் குறித்து தகவல் தெரிவிக்கவும்

தென்தாமரை குளம் அருகே சாமி தோப்பில் கடந்த 5ம் தேதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீசார் இறந்து போனவர் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்க கூறி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
குமரியில் இடைநிலை ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இடம் மாறுதல் கூறி விண்ணப்பித்தவர்கள் வரிசைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
குமரியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இ-ஸ்கூட்டர் வாங்க ஆர்வமுள்ளவர்கள் இங்கே <