News August 5, 2024
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
விருதுநகர்: அ.தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

அ.தி.மு.க., மாநில மாணவர் அணி துணை செயலாளராக நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மச்ச மணிகண்டன் கடந்த ஒரு சில மாதங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓரிரு மாதத்திலேயே அவரது பதவியை பறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று முதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
News January 20, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 19, 2026
விருதுநகர்: LOAN வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கி/பிற நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும். <


