News May 15, 2024
விருதுநகர்: பீகார் வாலிபர் மீது தாக்குதல்

பீகாரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(29). இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கி உள்ள இடத்தின் அருகே உள்ள தொட்டிக்கு மே 13ஆம் தேதி காலை குளிக்க சென்ற போது கேரளாவைச் சேர்ந்த சபிக், சிகாப் , ரியாஸ் ஆகிய 3 பேர் அப்துல் ரகுமானை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து அப்துல் ரகுமான் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News December 12, 2025
விருதுநகர்: அரசு வேலை வேண்டுமா…இலவச பயிற்சி

விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a முதன்மை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உடையோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் தெரிவிக்கலாம்.
News December 12, 2025
விருதுநகர்: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.
News December 11, 2025
ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிரான வழக்கு ரத்து

பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை இன்று ரத்து செய்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.


