News November 3, 2025
விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News November 16, 2025
விருதுநகர்: SIR தொடர்பாக தொலைபேசி எண் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
விருதுநகரில் 4 மையங்களில் ஐடிஐ லெவல் தேர்வு

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி அடிப்படை தேர்வு நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் காலை 601 தேர்வர்கள், மதியம் 601 தேர்வர்கள் என 1202 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு கூட்டத்திற்கு ஹால் டிக்கெட் உடன் வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


