News March 20, 2024
விருதுநகர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News March 12, 2026
விருதுநகர்: உங்க ரேஷன் கடையில் பிரச்னையா.?

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
1.ராஜபாளையம் – 04563220500
2.ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
3.சாத்தூர் – 04562260220
4.சிவகாசி – 04562224260
5.விருதுநகர்- 04562243493
6.அருப்புக்கோட்டை – 04566220219
7.திருச்சுழி – 04566282222
8.காரியாபட்டி – 04566255570
9.வெம்பக்கோட்டை – 04562284202
10.வத்திராயிருப்பு – 04563288800
News March 12, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர் கைது

வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முருகேஸ்வரி மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து முருகேஸ்வரி மகன்களான மாரீஸ்வரன், காவலர் பூமாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
News March 12, 2026
ஸ்ரீவி: 2 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி(24), பாலசுப்பிரமணி(26). நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி அழகர்சாமி, பாலசுப்பிரமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


