News October 1, 2025

விருதுநகர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்

image

விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார்நகரில் உள்ள முள்காட்டு பகுதியில் டவுன் எஸ்ஐ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் கார்த்திக் (36), அந்தோணி மகன்கள் குமரேசன் (30) லட்சம் என்ற குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 15, 2025

விருதுநகர்: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம் மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

விருதுநகரில் கத்தியால் குத்தியவருக்கு மாவுகட்டு

image

விருதுநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கார்த்திக்குமார் 42 என்பவரை அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், மணிகண்டன் மற்றும் மற்றொரு நபர் கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் செல்வத்தை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்யும் போது சுவரில் ஏறி தப்பியோட முயன்று கீழே விழுந்து கை, கால் முறிந்ததால் விருதுநகர் GH-ல் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!