News November 25, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
விருதுநகர்: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜவேல்முருகன் என்பவரது மகன் பத்மேஷ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பத்மேஷ் மற்றும் தம்பி இருவரும் சைக்கிளில் விளையாடியபோது தம்பி கீழே விழுந்துள்ளார். இதனால் ராஜவேல்முருகன், பத்மேஷை திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து, பத்மேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 16, 2026
விருதுநகர்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 16, 2026
விருதுநகர்: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


